பரதவர் இனத்தின் தொன்மை வரலாறு, மீனவ சமுதாயம் படுகிற துன்பங்கள், அரசு காட்ட வேண்டிய கருணை என தகவல்களை உடைய நுால். எளிதில் புரியும் வகையில் பாடலாக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நில வகைகள் ஐந்து. இதில், குறிஞ்சி நிலத்தில் வேடுவர் மற்றும் நெய்தலில் மீனவர்கள் துணிச்சலை விவரிக்கிறது; அனுபவிக்கும் துயரங்களை கூறுகிறது. எல்லா வகை மீன்களின் பெயர், படங்களுடன் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.
மின்விளக்கே இல்லாத ஊர்கள் இன்றும் உள்ளன என்ற செய்தி வருத்தத்திற்குரியது. முத்து வியாபாரம் செய்த போது உயர்ந்திருந்த சமூகம் பற்றியும் அழகான கருத்து உள்ளது. தீவு என்பது தான் பாரதம் என எடுத்துரைக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்