இறந்து போன பிரபலங்களை வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அமைந்த புத்தகம். பிரபலங்கள் வாழ்ந்தபோது நடந்த நிகழ்வுகளை அலசுகிறது. மனதுக்கு பிடித்தது, ஒத்துப்போகாதது என சொல்வதாக அமைந்துள்ளது. சிந்தனையே இல்லாமல் இருப்பது, செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது தான் என்று தத்துவ மேதை மகரிஷி ஓஷோ சொன்னதாக குறிப்பிடுகிறது.
ராஜதந்திரம் மட்டுமே அரசியல்வாதிக்கு அழகு. அது இல்லாவிட்டால் அரசியலில் குப்பை கொட்ட முடியாது. அரசியலில் வாரிசுகளை உருவாக்க வேண்டும். அதில் தோற்றதற்கு உதாரணம் நாவலர் நெடுஞ்செழியன். உங்கள் சொத்தை சாப்பிட முடியாத போது ஊரானுக்கு ஏன் சேர்த்து வைக்கிறீர் என, மறைந்த கக்கன் கேட்பதாக உள்ளது.
– சீத்தலைச்சாத்தன்