தமிழக சட்டசபையில் வருவாய்த்துறை தொடர்பாக விவாதிக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நிலம் தொடர்பாக கடந்த 2013 முதல் 2024 வரையுள்ள மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் நிலம் தொடர்பாக வெளியான அறிவிப்புகள், விவாதங்களை உள்ளடக்கியுள்ளன. அரசின் கொள்கை விளக்க குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. நில விற்பனை பதிவில் மாற்றங்கள், வகை மாற்றம் குறித்த விபரங்களை அறிய உதவும்.
நில சீர்திருத்த அறிவிப்புகளின் வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன. பேரிடர் கால நடவடிக்கை குறிப்புகளும் அடங்கியுள்ளன. தமிழகத்தில் நில உரிமையாளர்களுக்கு பயன்படும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு உரிய ஆவண தொகுப்பு நுால்.
– மதி