தமிழில் ஹைக்கூ என்ற குறுங்கவிதைகளையும், அதை எழுதும் முக்கிய கவிஞர்களையும் வரலாற்று ரீதியாக அறிமுகப்படுத்தும் நுால். இந்த வகை கவிதை உலகத்தில் செயல்பட்டு வரும், 25 பேரின் படைப்பின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது.
தமிழகத்தில் மலர்ந்து வரும் குறுங்கவிதை சிறப்பை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிஞரின் தனித்துவ செயல்பாடும், கவிதை அமைப்பில் உள்ள நயமும், கருத்து செறிவும், சமூக ஈடுபாடும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
மனதில் பதிந்து மாறாத உயிர்ப்பை தரும் வண்ணக் கவிதைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தமிழக பண்பாட்டுப் பரப்பின் சாராம்சத்தை குறைந்த சொற்களில் வெளிப்படுத்துவதை விவரிக்கிறது. புதுமைக் கவிதைகளை அழகுற அறிமுகம் செய்யும் நுால்.
– ஒளி