மதினாவில் பிறந்த சையித் இப்ராஹீம் ஷஹீத், குஜராத், கேரளா, தமிழகத்தில் இஸ்லாம் வழிபாட்டை பரவச் செய்ததை குறிப்பிடும் நுால்.
இந்திய பகுதிக்கு வந்தது, சேர மன்னனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. சேர நாட்டில் பணி செய்தபின், கன்னியாகுமரி வழியாக காயல்பட்டினத்திற்கு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
பாண்டியருடன் போரிட்டு, ஏர்வாடிக்கு வந்துள்ளார். மறைவுக்குப் பின் குடும்பத்தினரே அந்தப் பகுதி ஆட்சி பொறுப்பை ஏற்றது கூறப்பட்டுள்ளது. சமாதியில் வேலைப்பாடுள்ள தர்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சூபியாக அவர் போற்றப்படுகிறார். வாழ்க்கை வரலாறாக அமையாமல் உலக வரலாற்றையும் எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்