கொங்கு மண்டலத்தில் குறுநில மன்னர்கள், குடிகளின் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நாவல் நுால். சேர, சோழ, பாண்டியர்களையும் சேர்த்து பின்னப்பட்டுள்ளது.
மன்னராட்சி வரலாற்றுக்கே உரித்தான பெண்ணாசை, மண்ணாசை, சதிச்செயல்கள், சண்டைகள், தண்டனைகள், உட்பகை என திருப்பங்களோடு கதைக்களம் நகர்கிறது.
நொய்யல் நதிக்கரையில் இருந்த நாகரிகம் பற்றி கூறுகிறது. அங்கு, எருமைகளின் புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டதை முன்வைக்கிறது.
கொடுமணல் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. தற்போது கிடைத்துள்ள கொங்குதேச ராஜாக்கள் என்ற சுவடியை முன் வைத்து புனைந்துள்ள நாவல் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு