சோழர் வரலாற்றில் மர்மமாக நடந்த ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய நுால்.
கல்கியின் கதைக்களம் பின்னணியில் ஆதித்தன் கொலையை மாறுபட்ட கோணத்தில் அணுகி அலசுகிறது. கற்பனைக் கதை மாந்தர்கள் பற்றியும் விவரிக்கிறது. எழுத்தாளர் பாலகுமாரன் கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.
ஆதித்தனைத் தொடர்ந்து, 16 ஆண்டுகள் ஆட்சி செய்த மதுராந்தகன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுகிறது.
திருவாலங்காடு செப்பேடு, கல்வெட்டுச் சான்றுகளையும் எடுத்துக் கூறுகிறது. வஞ்சகம், சூழ்ச்சி, சதி, போர்த்தந்திரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ள தகவல்கள் வாசிப்புக்கு விறுவிறுப்பு ஊட்டுகின்றன. சோழர் வரலாற்று நிகழ்வுகளை அறியும் நோக்கிலான நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு