மனித சமுதாயத்தில் நிகழும் பல விஷயங்களை தொகுத்து தரும் கவிதை நுால்.
ராணுவத்தில் பணியாற்றும் வீரன், குழந்தையை நினைத்து ஏங்குவதும், அதே நேரத்தில், தாய்நாட்டின் எல்லையை காக்க துடிப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் கவிதை சிந்திக்க வைக்கிறது. மனிதனுக்கு விடாமுயற்சி எப்போதும் இருக்க வேண்டும் என்பதை, ஐந்தறிவு உயிரினங்களை உதாரணமாகக் காட்டி விளக்குவது சிறந்த அணுகுமுறை.
மனிதர்களை ஒரே இனம் என்கிறது. பிரிவினை, சண்டைகளை தீர்க்க, கடவுள்கள் சேர்ந்து வந்து அறிவுரை வழங்க வேண்டுமென வேண்டுதல் செய்கிறது. நடைபாதைகளில் வாழும் மக்களின் போராட்ட வாழ்க்கை முறை பற்றியும் உரைக்கும் நுால்.
– முகில்குமரன்