மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை அலசும் நுால்.
இளமை பருவம், படிப்பு, திருமணம், அரசியலில் கால் பதித்தது, பாதுகாவலரால் கொல்லப்பட்டது வரை சொல்லப்பட்டுள்ளது. சமூக அனுபவங்களை விவரிக்கிறது. இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயரில் உள்ள சுவாரசியம், அவசரநிலை பிரகடனத்தால் ஏற்பட்ட இழப்பை சொல்கிறது.
பிரதமர் பதவிக்கு வர காரணமான காமராஜ் குறித்தும், அவருடன் பிணக்கையும் பகிர்கிறது. இரும்பு பெண்மணியாக வாழ்ந்தவரின் காதல் திருமணம், கணவருடன் கொண்டிருந்த உறவு பற்றிய தகவல்கள் உள்ளன. தந்தை நேரு அரசியலால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கிறது. வாசிக்க எளிமையாகவும், சுருக்கமாகவும் படைக்கப்பட்டுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்