மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மரபுக் கவிதை நுால். நான்கு காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
முதல் காண்டத்தில் பிறப்பு வளர்ப்பு, படிப்பு, அரசியல் களம், அடைந்த வளர்ச்சி கூறப்பட்டுள்ளது. தி.மு.க., வளர்ச்சிக்கு அர்ப்பணித்த திறம் விளக்கப்பட்டுள்ளது. போராட்டம், வெற்றி, படத்துறை வாய்ப்பு, திரைப்பட வசனம் எழுதியது குறித்து கூறப்பட்டுள்ளது.
அடுத்து ஆளுமை காண்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றது பற்றி குறிப்பிடுகிறது. நாட்டிற்கு ஆற்றிய தொண்டு, வளர்ச்சித் திட்டங்கள் பற்றி தெரிவிக்கிறது. ஆதி முதல் அந்தம் வரை அனைத்துத் தகவல்களும் அடங்கியுள்ளது. எளிய நடையில் அமைந்த மரபுக் கவிதை நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்