இமயத்தில் கொடியை நாட்டிய தமிழ் மன்னன் வீர வரலாற்றை விளக்கும் நுால். காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி, பசுமை வளம் காத்த கரிகாலன் பற்றி, 34 காட்சிகளுடன் நாடக வடிவில் சொல்லப்பட்டுள்ளது.
வெண்ணிப் பறந்தலையில் நடந்த போரில் எதிரிகளை அடக்கி சக்கரவர்த்தி என்ற புகழோடு விளங்கியது, நாடு முழுதும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ததை குறிப்பிடுகிறது. இமயத்தில் புலிக்கொடி பறக்க விட்டதை பறை சாற்றுகிறது.
பட்டத்து அரசியுடன் நடத்தும் உரையாடல் இன்றைய நிலையுடன் ஒப்பிடுவதாக உள்ளது. வரலாற்று நிகழ்வை சுவை குன்றாத நாடகமாக்கி உதாரணமாக விளங்குகிறது. காட்சி, கதாபாத்திரங்கள், உரையாடல் என முறையாக அமைந்துள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்