சிறப்பாக வீடு அமைத்து குடியேற ஆலோசனை கூறும் நுால்.
நிலத்தின் தன்மை, மண்வாகு, ராசிகளுக்கு ஏற்ப வாசல் அமைத்தல், மண் பரிசோதனை, மனை முகூர்த்தம் செய்யும் ராசி, மாத பலன், சுவர்களின் உயரம் அதன் பலன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் மாதம், முகூர்த்த நேரம், பயன்படும் மரங்கள் அதற்கான பலன்கள், கிணறு வெட்டும் திசை, அறைகள் அமைக்கும் முறையை விவரிக்கிறது.
வீடு கட்டும்போது பார்க்க வேண்டிய பொருத்தங்கள், மனை முகூர்த்த சுப சகுனங்கள், செய்ய வேண்டிய அர்ச்சனைகள், கூற வேண்டிய மூல மந்திரங்கள், பாராயணம் செய்ய வேண்டியவை இடம் பெற்றுள்ளன. இல்லம் அமைத்து இனிதே வாழ விரும்புவோருக்கு உரிய நுால்.
– புலவர் சு.மதியழகன்