ஆசிரியர் பணியில் அனுபவமுடையவர் ஆழ்ந்த அறிவு கொண்டு, மாணவர்களுக்கு உதவும் வண்ணம் படைத்துள்ள நுால். தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் போக்கும் வகையில் அமைந்துள்ளது.
தன்னம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பு எண்ணமே தடைகளைத் தகர்த்தெறியும் என்கிறது. மனப்பாடம் செய்வது எப்படி, அதனால் விளைகிற பலன்கள் என்னென்ன என்று அழகுற விளக்கப்பட்டுள்ளது.
பாடங்களை எப்படி வாசிக்க வேண்டும் என முக்கிய அறிவுரை உள்ளது. உணவுப் பழக்கம் எப்படி இருந்தால் நலம் பயக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலையும், திட்டமிட்டு செயல்படுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எடுத்தியம்புகிறது. மாணவர் சமுதாயத்திற்கு பேருதவி புரியும் அருமையான நுால்.
– டாக்டர் கார்முகிலோன்