வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள கருத்துகள் உணர்ந்து பின்பற்றும் விதிமுறை போல் உள்ளது. பிள்ளையைப் பெறுவதால் மட்டும் பெற்றோர் என்று சொல்ல முடியாது. பேணி வளர்க்கும் முறையில் தான் பெருமை இருக்கிறது என எடுத்தியம்புகிறது.
செல்வம் தேடுவது மட்டுமே லட்சியம் என்று இருக்கக் கூடாது. தன்னம்பிக்கை, இறை நம்பிக்கையை பிள்ளைகள் மனதில் பதிக்க வேண்டிய பொறுப்பு முதல் கடமை என்று அறிவுறுத்துகிறது. குழந்தைகள் முன், பொறுப்புணர்வோடு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியதை வலியுறுத்துகிறது. இருள் நீக்கி வழி காட்டும் ஒளி விளக்காய் திகழும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்