சுய முன்னேற்றத்துக்கு நேர நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது என உணர்த்தும் நுால். எளிய நடையில், அர்த்தமுள்ள தலைப்புகளில் சுவாரசியமாக உள்ளது.
வாழ்வில் சுயமாக முன்னேற மிகவும் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது நேர நிர்வாகம். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொன்மொழிகள் ஏராளம் உள்ளன. நேரத்தை நிர்வகித்து கடைப்பிடிக்கும் முறையை கற்றுத்தருகிறது.
நேரத்தை கண்டுபிடித்தலில் துவங்குகிறது. ‘ஒரு நாள்’ என்பது என்ன என்பதை விளக்குகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நேரம் சேமிக்கும் வழிமுறைகளை எடுத்து கூறுகிறது. நேரத்தை பட்டியலிட்டு, அட்டவணைப்படுத்தி, சாதனை படைக்கும் உத்திகளை கூறுகிறது. ஒரு எண்ணத்தை செயலாக்கும் வழிமுறையை காட்டும் நுால்.
– மதி