கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கை வரலாற்று நுால். சுலபமாக வாசிக்க ஏற்றவகையில் கதைபோல் எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகம் நிகழ்வில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இசை நிகழ்ச்சியை முதலில் கவனித்ததில் துவங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு முடிந்து திரும்பும் போது, தன் தந்தையிடம் விபரம் கேட்டு அறிவது போல் ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், 34 அத்தியாயங்களாக பகுக்கப்பட்டுள்ளன. இளமைப் பருவம் துவங்கி, மறைவு வரை தகவல்கள் உரிய படங்களுடன் தரப்பட்டுள்ளன.
திருப்பதியில் சிலை, தமிழக கவிஞர்களின் புகழ் கவிதைகளுடன் நிறைவு பெற்றுள்ளது. இசையரசியின் வாழ்க்கை வரலாற்று நுால்.
– ஒளி