வரலாற்றில் நடந்த வினோதமான நிகழ்வுகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் குன்றாத, 77 தகவல்கள் இதில் உள்ளன. புவியியல், சினிமா, அரசியல், இயற்கை, பரிணாமம் என பல தளங்களிலும் நிகழ்ந்த செய்திகள் அடிப்படையில் அமைந்துள்ளது.
‘மிஸ் இண்டியா’ விருது பெற்ற பெண், பாலியல் தொழிலாளியாக மாறியதை தெளிவாக சொல்கிறது. இந்தியாவில் இருந்து மெக்காவுக்கு சென்ற முதல் கப்பல் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாரஸ் மலையில் நடக்கும் நிகழ்வுக்கும், இந்திய மக்கள் நம்பிக்கைக்கும் முடிச்சு போடும் சுவைமிக்க சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் நிகழ்வுடன், மக்கள் நம்பிக்கையை இணைத்து ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது. எளிய நடையில் அமைந்த தொகுப்பு நுால்.
– ராம்