குடும்பம், காதல் கலந்த சுவாரஸ்யமான நாவல்.
செல்வந்தர் மகள் சினேகா தாயை இழந்தவள். நிம்மதி இல்லாமல் தவிக்கிறாள். ஆயா அரவணைப்பில் வளர்கிறாள்.
தனக்கு ஏன் அம்மா இல்லை, எங்கே போனாள், என்ன ஆனாள் என்ற கேள்விகள் எழுகின்றன. இடையில் வாலிபருடன் காதல் தீவிரமான போது, அம்மா குறித்த கேள்வி பிரச்னையாக எழுகிறது; குழப்பம் விளைவிக்கிறது. அம்மா பற்றிய உண்மை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.
அம்மா கிடைத்தாளா, காதல் கைகூடியதா என, முடிச்சுகளுடன் நகர்கிறது. நட்பு, பாசம், சூழ்ச்சி, அரசியல் என நகரும் கதையில் காதல் படலம் தென்றலாய் குளுமை ஊட்டுகிறது. தெள்ளிய நீரோட்டமாய் பாயும் கதையில் எட்டிப் பார்க்கும் வர்ணனை வசீகரிக்கிறது. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நாவல்.
– ஊஞ்சல் பிரபு