வித்தியாசமான தலைப்பிலான நாவல் நுால். படிக்கும் போது பொருள் புரிகிறது. முட்கள் நிறைந்த பலாப்பழம் சுவை நிறைந்துள்ளதை போல் காட்டுகிறது.
குமரித்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. முன்னுரையை படிக்கும் போது ஆசிரியரின் சொந்தக் கதையோ என்ற எண்ணம் எழுகிறது. உடன் பிறந்தோர் திருமணத்திற்காக, தந்தை சொத்துகளை அடகு வைக்க, உழைப்பால் அதை மீட்டெடுப்பது தான் கதை.
தந்தைக்கும், மூன்றாவது மகளுக்கும் உள்ள பாச போராட்டத்தின் பின்னணியில் படிப்பின் முக்கியத்துவமும் பேசப்பட்டுள்ளது. முதல்வராக காமராஜர் இருந்த போது அமல்படுத்திய பட்டணங்கால் திட்டம் பற்றியும் கூறுகிறது. அதை கவனிக்காமல் விட்டதால் விவசாயம் பாழடைந்ததையும் கண்ணீருடன் விவரிக்கிறது. புதுமையாக மலர்ந்துள்ள நாவல் நுால்.
– சீத்தலைச் சாத்தன்