குலதெய்வம் கோவிலில் தரிசனத்துக்கு போகும் பயணத்தை விவரிக்கும் நாவல் நுால்.
வனத்தின் வழியாக போகும் பயண அனுபவத்தை அருகில் நின்று பார்ப்பது போல் சித்தரிக்கிறது. நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. நெல்லைத் தமிழின் தனித்துவம் மனம் கவர்கிறது.
சமைக்கும் உணவை சுவாமிக்கு படைத்து, கோரிக்கைகளை உரிமையோடு வைப்பதை, எளிய மக்களின் நடைமுறையாக எடுத்துரைக்கிறது. குலதெய்வத்தை உணர்வுப்பூர்வமாக வழிபடும் தருணத்தில் படைப்பாளியின் மனநிலை துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. நெருக்கமானவர்களோடு வனத்திற்குள் சென்று வந்த அனுபவத்தை தரும் நாவல்.
– ஊஞ்சல் பிரபு