வியாசர் அருளிய மகாபாரத கருத்துகள் சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் வழிகாட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டு உள்ளதால் எளிதில் படிக்க ஏற்றது.
ஜனனம், மரணம், வினை பயன் ரகசியங்கள், வேதம், யோகம், ஞானம், தர்மம், சாத்திரங்கள் மற்றும் உலக நடைமுறையை உரைக்கிறது. பிறப்பால் ஜாதிகள் இல்லை என தெளிவாக்குகிறது.
பாரத தேசம் சுதந்திரம் பெற்ற பின் இயற்றப்பட்ட சட்டங்களில், மகாபாரத நீதி எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்