ஏழை எளிய மக்களை உயர்த்த பாடுபட்ட மகான் பற்றிய அற்புத நுால்.
நாட்டின் வளர்ச்சி மக்கள் வாழ்க்கை தரத்தில் இருக்கிறது; மக்கள் வளர்ச்சி என்பது சமமான வாய்ப்புகளில் இருக்கிறது. அதை உருவாக்க கேரளாவில் அரும்பணியாற்றியவர் ஸ்ரீநாராயண குரு. மனிதாபிமானத்தை முன்னிறுத்தி உபதேசித்த மகான்.
ஜாதி முறையில் எதையும் பேசாதே, கேளாதே என்பது இவரது திருவாக்கு. சமயத்திலும், சமுதாயத்திலும் புரட்சிகள் செய்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அகிம்சை வழியில் போராடினார். அதனால் விளைந்த நன்மைகளும், மாற்றங்களும் பிரமிப்பூட்டும். அவரைப் பற்றிய அரிய உண்மைகளை வெளிச்சமிடும் நுால்.
-– இளங்கோவன்