வாழ்வை சிறப்பாக அமைக்க உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் மிக்க எளிய நடையில் அமைந்துள்ளது.
மகான்களின் வாழ்வில் நிகழ்ந்தவை, பணக்காரர்களின் மேலான படிப்பினை, அன்றாடம் வாழ்வுக்கு உதவுபவை என வகை வகையாய் கதைகள் அமைந்துள்ளன. எதையும் நீட்டி முழக்காமல் சிறிய பத்திகளில் ஆர்வமாக படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
படித்தவுடன் புரிந்து ஒரே வரியில் பொன்மொழியாகவோ, விடுகதையாகவோ மாற்றி பயன்படுத்த முடியும். பொதுவான அறிவுரை கூறவும் உதவும். அந்த அளவு ஈர்ப்பு, கலகலப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. படுக்கை அறையில் குழந்தைகளுக்கு சொல்லி அறிவு புகட்டலாம்.
பொதுமேடைகளில் எளிதாக சொல்லலாம். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– விநா