கல்வி கற்பிக்க உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை குறித்து சுருக்கமாக உரைக்கும் நுால்.
குறைந்த செலவில் தற்காத்துக்கொள்ள கல்வி அளிக்கக் கூறியுள்ளார் சீன தத்துவ ஞானி கன்பூஷியஸ். ஏட்டுக்கல்வியை விட அனுபவப் பள்ளியால் பாடம் நிறைய கற்கலாம் என முன்வைத்து கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. அறிவு தரும் படிப்பு இல்லாமல் போனதற்கு கல்வி வியாபாரமானது தான் காரணம் என சுட்டிக்காட்டுகிறது.
சைபீரியப் பகுதி யாகூட்ஸ் நகரத்தில் மக்கள்தொகை 50,000 தான்; ஆனால், நுாலகத்தில் 5.5 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறிய பகுதி, அறிவில் கொடிகட்டி பறப்பதாக குறிப்பிடுகிறது. கல்வி என்பது பங்கேற்பு, உருவாக்கம் என குறிப்பிடும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்