செயல்களை நாளை செய்யலாம் என ஒத்தி வைப்பதால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிய அப்பாவை தட்டிக்கேட்ட மகன், தானே அனாதை என அறிந்து, படும் வேதனையை ஒரு கதை வெளிப்படுத்துகிறது. கறாரான வாழ்க்கை நடைமுறையை முதிய பெண் கடைப்பிடிக்கும் மனிதநேயத்தை மற்றொரு கதை வெளிப்படுத்துகிறது.
அறியாமல் நடந்த தவறுக்கு மனைவியை தண்டித்த கணவனின் மன மாற்றத்தை பேசுகிறது ஒரு படைப்பு. ரவுடியின் மகனை கண்டித்த ஆசிரியருக்கு கிடைத்த பரிசு என வித்தியாசமான முடிவுகளுடன் கதைகள் பின்னப்பட்டுள்ளன. அன்றாடம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கருவாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்