திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரத்தைப் பற்றி விளக்கும் நுால். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தையும் குறிப்பிடுகிறது.
சைவ சமய குரவர்கள் நான்கு பேர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதச் செயல்களை பாடல் வழியாக விளக்கிச் சொல்கிறது. திருநாவுக்கரசு நாயனாருக்கு துன்பம் ஏற்பட்ட போது, ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி விடுபட்ட நிகழ்வை விவரிக்கிறது.
ஆண் பனை மரத்தை, பெண் பனையாக மாற்றியது குறித்தும் சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சுந்தரரை சிவன் தடுத்து ஆட்கொண்ட வரலாற்றை விவரிக்கிறது. சைவ நெறியை பின்பற்றுவோர் எல்லாம் படித்து சுவைத்து, பக்தி செலுத்த உகந்த அருமையான ஆன்மிக நுால்.
– புலவர் ரா.நாராயணன்