ஒழுக்கம் நடைமுறைகளுடன் வாழ்வதற்கு உரிய வழிகாட்டி நுால். பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களை விரிவாக விளக்குகிறது.
குடும்பத்தில் ஒழுங்கு, பழக்க வழக்கங்கள், குழந்தை பராமரிப்பு, ஆன்மிக நடைமுறைகளில் தெளிவான ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.
அன்றாடம் வாழ்வை சரியான பாதையில் வழி நடத்தக்கூடிய அரிய அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. குடும்ப மற்றும் சமூக ஒழுக்க முறைகளை உணர்ந்து செயல்பட விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. எளிய, பயனுள்ள வாழ்வியல் வழிமுறைகளை உணர்ந்து பயனடைய பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால்.
– இளங்கோவன்