தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு நுால். தனிச்சிறப்புகளை அறியத் தருகிறது.
முதல்வர் பொறுப்பில் எம்.ஜி.ஆர்., பதவி வகித்த போது, அரசு சார்பில் அவரது நேர்முக உதவியாளராகவும், துணை செயலராகவும் பணிபுரிந்த பிச்சாண்டி, மறையும் வரை உடனிருந்தார். முதல்வராக எம்.ஜி.ஆர்., ஆற்றிய பணிகள், குண நலன்கள் அனுபவமாக புத்தகம் முழுக்க பதிவாகியுள்ளன.
மக்களிடம் காட்டிய நெருக்கம், உயர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியது, திட்டங்கள் தீட்டிய பின்னணி, கட்சியை நிர்வகித்த விதம் என ஆட்சியின் பல அம்சங்களையும், தனிப்பட்ட வாழ்வையும் தொட்டு செல்கிறது. எம்.ஜி.ஆரின் செயல்பாட்டை கூறும் நுால்.
– மதி