ஏழு சீரஞ்சீவிகள் பற்றிய தொன்மவியல் கதைகளையும், தற்கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருங்கிணைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். வாழ்க்கை சிக்கல்களையும், மரணத்திற்குப் பிறகு தொடரும் நிகழ்வுகளையும் ஆராய்கிறது. வியப்பூட்டும் திருப்பங்களும், உயிரியல், ஆன்மிகம், மரபியல் உள்ளடக்கிய யாத்திரையாக அமைந்துள்ளது.
கதாபாத்திரங்களின் உளமார்ந்த விளக்கம் திரில்லர், சஸ்பென்ஸ், மாயாஜால ஒத்திசைவு சிறப்பாக உள்ளன. அறிவியல், ஆன்மிக கலவை கதை விரும்புவோர், தற்கால மற்றும் தொன்மவியல் கலந்த கதைகளை வித்தியாசமாக அனுபவிக்க விரும்புவோருக்கு மிகவும் பிடிக்கும்.
மறைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை தேடும் பயணமாக அமைந்துள்ள நாவல் நுால்.
– இளங்கோவன்