மனித உறவுகளை மையமாகக் கொண்ட மன வளர்ச்சி நுால். மூன்று முக்கியமான வார்த்தைகள் எப்படி வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை அழகாக விளக்குகிறது. உள்ளுணர்வை துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
வாழ்வின் ஆழமான உறவுகளை உருவாக்கும், வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் நுணுக்கமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்நுாலில் உள்ள கருத்துகள், நேர்மறை பார்வையை உருவாக்கும்.
மனிதர்களுக்கு இடையே உறவை உறுதிப்படுத்தும் வகையிலான நடைமுறை விளக்கங்கள் சிறப்பாக உள்ளன. தயவு செய்து, மன்னியுங்கள், நன்றி என்ற மூன்று வார்த்தைகள் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நுால்.
– இளங்கோவன்