எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.
நட்பு, காதல், பண்பாடு, நாட்டுப்பற்று, கல்வி, சுற்றுச்சூழல், மரபு, ஈரம், வீரம், சமூக அவலம் போன்ற பொருண்மைகளில், 24 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அயலகத்தில் வேலை செய்து கணவன் அனுப்பும் பணத்தைச் சிக்கனமாக செலவிடும் பொறுப்புள்ள மனைவி, தந்தை மனம் அறிந்து கிடைத்த வேலையை உவப்பாக செய்யும் தனயன் என பொறுப்பான பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
நீர் பிரச்னையால் கிராமங்கள் பகை அனலில் கொதிக்கும் பிரச்னையை காட்டுகிறது, ‘புதைந்து போன நகரம்’ கதை. ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய வீரனின் விருது வீட்டுக்கு வந்தாலும், ஒரே மகனை தேடும் தாயின் பேரன்பு ரசனையுடன் அமைந்துள்ளது. உணர்வுகளாலான தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்