பிரபல எழுத்தாளர் க.நா.சு., எழுதிய நாவல் நுால்.
பழமையை விரும்புவோர் வசிக்கும் தெருவில், புதிதாக வந்த ஏழு பேர் குடும்பம் தங்குகிறது. அதில் பெண்கள் அழகாக இருக்கின்றனர். அவர்கள் குறித்து வம்பு பேசுவதாக விரிகிறது. அந்த பெண்களை விட மேம்பட்ட நிலையில் வாழ்வதாக எண்ணுகின்றனர் தெருவாசிகளான பெண்கள்.
அங்கு வசிக்கும் ஆண்களின் மனோபாவம் வேறாக இருக்கிறது. மான, அவமானம் பாராது புதிய வீட்டிற்குள் நுழைவோர் ஒரு ரகம். அந்த தைரியமின்றி நாள் முழுதும் அந்தப் பெண்கள் நினைவாக கற்பனையில் வாழ்வோர் இரண்டாம் ரகம். இரண்டு குழுவிலும் இல்லாமல் புரட்சி செய்வதாக எண்ணுகிறான் ஒருவன். அவனை சுற்றி நகர்கிறது கதை. ஒரு நிகழ்வு என்னென்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதே மையக்கரு. வித்தியாசமான நாவல் நுால்.
– ராம்