தகவல் களஞ்சியமாக திகழும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
வாழ்வில் வெற்றி பெற, சோதனைகளைக் கண்டு துவண்டு போகாமல், போராடும் எண்ணத்துடன் துணிந்து செயல்பட வேண்டும் என கற்பிக்கிறது. இதற்கு சான்றளிக்கும் விதமாக, மகாபாரத கர்ணனின் சங்கடங்களை முன் வைக்கிறது. மனம் உடைந்து முடங்கிப் போகாத உறுதியை தருகிறது.
பெண்களின் பெருமை குறித்து பேசும்போது புராண இதிகாசங்களை ஆய்ந்தறிந்து ஒப்பு நோக்கி கொடுக்கிறசெய்திகள் ஏராளம். தானம், தர்மத்தை விவரித்துச் சொல்வதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டுகிறது. உணவால் வரும் உணர்வு பற்றி பீஷ்மர், காந்திஜியை முன்வைத்து பகர்கிறது. வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம்.
– டாக்டர் கார்முகிலோன்