பாவ புண்ணியங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய நுால்.
ஹிந்து மதம் மறுபிறப்பை வலியுறுத்துவதுடன், ஒவ்வொரு உயிரினத்துக்கும் வாழும் காலத்தை நிர்ணயித்துள்ளது பற்றி விவரிக்கிறது. தானம் கொடுப்பதால் உண்டாகும் பலன்களை விளக்குகிறது. இறந்தோருக்கு போடும் பிண்டத்திலிருந்து சரீரம் உருவாகும் விதத்தை விளக்குகிறது.
பிரேத ஜன்மத்தால் ஏற்படும் தீங்குகளையும், இறந்தவருக்கு செய்ய வேண்டிய கர்மங்களையும் கூறுகிறது. நரக வகைகள், அதில் கொடியவை பற்றி விளக்குகிறது. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து