சித்த மருத்துவம் பற்றிய நுால். மனிதர்களின் வயது, பருவ நிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
தாம்பத்திய வாழ்வின் உளவியல் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. குழந்தை உருவாக கரு எப்படி இருக்க வேண்டும், கருப்பையின் முக்கியத்துவம், கரு முட்டை உருவாகும் விதம், செயற்கை கருவூட்டல், மலட்டுத் தன்மை, உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
இளமையுடன் வாழ சித்த மருத்துவக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பிரம்ம முனிவரின் மருத்துவ விளக்கங்கள், நாடி சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அக மருந்துகள், புற மருந்துகள் என்னென்ன என்பதும், விஷ முறிவு குறிப்புகளும் உள்ளன. புதிய தகவல்களை தரும் நுால்.
–- முகில்குமரன்