மாறுபட்ட மேடை நாடகங்களை தொகுத்து தந்துள்ள நுால். அனைத்தும் விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு நாடகத்திலும் சமூகம் சார்ந்த மையக்கரு கைக்கொள்ளப்பட்டுள்ளது. நெகிழ்ச்சிமிக்க உறவுகள் சார்ந்த கதைகள் ஆர்வத்தை துாண்டுகின்றன.
காட்சியமைப்புகளும், எளிமையான உரையாடல்களும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
சாமானியரின் இயல்பு வாழ்க்கை அளவோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சராசரி நிகழ்வுகள், படிப்பினைகள் என உணர்ச்சிக் கலவையுடன் வடிவமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மேடையேற்ற பொருத்தமான நாடக நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு