தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து விரிவாக விளக்கும் நுால்.
கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன, அதன் பின்புலத்தில் உள்ள ஆன்மிக கருத்துகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், சிவன், அம்மன், சூரிய பகவான் என கடவுள் வழிபாட்டு முறைகள் மற்றும் பூர்வீகத்தை விவரிக்கிறது. கங்கை, காவிரி, யமுனை போன்ற புனித நதிகளின் மகிமையும், தீர்த்த யாத்திரையின் பலன்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன.
விஷ்ணு, சிவன், சக்தி வழிபாடுகளுக்கு பூர்வீகமாக உள்ள புராண, இதிகாச சம்பவங்களை விளக்குகிறது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. கோவில் வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்துகளை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.
– இளங்கோவன்