இசைத்தமிழ் அறிஞர் டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் வாழ்வு, பணிகளை அறிமுகம் செய்யும் நுால். இசை கற்பிக்கும் மரபும் வெளிப்படுகிறது.
தமிழக இசை மேடைகளிலும், அகில இந்திய வானொலியிலும் துணிவுடன் செயலாற்றியதை எடுத்துரைக்கிறது. சிறுவர்களையும் மேடையேற்றும் நல்லுள்ளம் கொண்டிருந்ததை குறிப்பிடுகிறது. இசை வகுப்பில் மதிப்பெண் முறையை கொண்டு வந்து, பெற்றோருக்கு அறிவிக்கும் பழக்கத்தை தோற்றுவித்ததை அறியத் தருகிறது.
நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி, பயிற்சியில் திருத்தம் செய்யும் இயல்பை குறிப்பிடுகிறது. இசையை புரிந்துகொள்ள மொழி தான் இயல்பு என செயல்பட்டதை வெளிப்படுத்துகிறது. தமிழிசை வரலாற்றில் முக்கிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்