அன்பை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் நுால். எண்ணிப் பார்க்க முடியாத வகையில் திகில் திருப்பங்கள் நிறைந்து ஆர்வத்தை துாண்டுகிறது.
பொறுப்பான குடும்பப் பெண், பருவத்தின் வாசலிலே, பாசத்தை எதிர்நோக்கி, ஆசையும், காதலும், அச்சமும் கொண்டு, உள்ளம் கவர்ந்த ஒருவனிடம் தன்னை தந்து மகிழ்கிறாள். அவ்வளவு புத்திசாலியான பெண்ணுக்கு, ஏன் அத்தனை சோதனைகள் அடுக்கடுக்காய் வந்து அல்லல்படுத்துகின்றன என்பதாக நகர்கிறது.
அன்பு நெஞ்சம் திருமணம் கண்டதா, இல்லையா என்பதை படித்து தெரிந்து கொள்ளவும். ஆசிரியரின் கற்பனை திறனும், கவின்மிகு நடையும் சிறப்பாக உள்ளன. படித்து முடித்தவுடன் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளத்தில் நிலை பெறுவதை உள்ளபடியாக உணரலாம்.
– டாக்டர் கார்முகிலோன்