அமரர் கல்கியின் வரலாற்று நாவல் எளிய ஆங்கில நடையில் அமைந்துள்ளது.
விஜயாலய சோழ மன்னர் முதல், ராஜேந்திர சோழன் வரை உள்ள பரம்பரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பாத்திரங்கள், உறவு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. சுந்தர சோழன் முதல் கந்தமாறன் வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உபரியாக பொன்னியின் செல்வன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.
கெடிலக்கரையில், பாட்டனும் பேரனும், வாலில்லாக் குரங்கு சிரிப்பும் நெருப்பும், மூன்று குரல்கள், படகில் பழுவேட்டரையர், வானதியின் சபதம், ஆழ்வானுக்கு ஆபத்து, மலர் உதிர்ந்தது போன்ற தலைப்புகளில் உள்ளன. சோழர் வரலாற்றில் நடந்த சம்பவங்களை தொகுத்து வரலாற்று பின்னணியில் அமைந்த நாவல்.
– பேராசிரியர் ரா.நாராயணன்