திருமண வாழ்விற்காக உருவாக்கப்பட்ட கோவில்களின் வரலாறு, ஆன்மிக உணர்வு மற்றும் அதன் சிறப்புகளை விரிவாக விவரிக்கும் நுால். திருமணத்திற்கு முன் மற்றும் பின் மணமக்கள் வழிபட வேண்டிய தலங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது.
ஒவ்வொரு கோவிலும் தனித்தன்மை வாய்ந்ததாக விளக்கப்பட்டுள்ளது. பாசாங்கற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தேவையான ஆன்மிக வழிகாட்டுதலை வழங்குகிறது. ஒவ்வொரு கோவிலும் ஏன் திருமணத்திற்கு பிரசித்தமானது என்பதை விளக்குகிறது.
குறிப்பிட்ட கோவில்களில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதற்கான விளக்கம் உள்ளது. கோவில்களின் அழகிய படங்களும் இடம் பெற்றுள்ள நுால்.
– இளங்கோவன்