ரகசியங்களை தேடும் விறுவிறுப்பான கதையாக அமைந்துள்ளது. இதை எழுதியது 10 வயது சிறுவன் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது. கதை மர்மமான வரைபடத்தை சுற்றி நகர்கிறது. இதில், ‘டிடெக்டிவ் கூப்பர்’ முக்கியமான வழிக்குறிப்புகளை தொடர்ந்து உண்மையை கண்டுபிடிக்கிறான். கதையில் திருப்பங்களும், புதிர்களும் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பகுதியும் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்து நடை எளிமையாக உள்ளது. விறுவிறுப்பு குறையாத திரில்லர் விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சிறுவர், சிறுமியரை கவரும் வகையிலான புதிர் கதை நுால்!
– இளங்கோவன்