வானியல் பற்றிய செய்திகளை விரிவாக தந்து, அறிவியல் ரீதியாக தெளிவு ஏற்படுத்தும் நுால்.
கோள்களின் நகர்வுகளை முன்வைத்து வானியல் உண்மைகளை புலப்படுத்துகிறது. பெண்கள் ஜோதிடத் தாக்கத்திலிருந்து மீள முடியாததை சான்றுகளோடு சுட்டிக் காட்டுகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஆதிக்கம் செலுத்துவதை விவரித்து தெளிவு பெற வலியுறுத்துகிறது.
ஜோதிடத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது. வானியல் புரிதல் இல்லாமல் தனிமனித வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை காட்டுகிறது.
வானியல் கோட்பாடுகள் ஜோதிடக் கணிதத்துடன் முரண்படுவதை விளங்க வைக்கிறது. மனித மாண்பை கட்டமைக்கும் வாழ்வியல் கூறுகளை பட்டியலிடும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு