தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் நுால். தமிழக வரலாற்று செய்திகளையும் தெரிவிக்கிறது.
மொழியைப் பயன்படுத்தி அரசு கட்டிலில் ஏறி அமர்ந்த வரலாற்றை விவரிக்கிறது. அது பண்பாட்டிற்கு அடித்தளமாக அமைந்தது கூறப்பட்டுள்ளது. தொன்மை வரலாறு துவங்கி, தேவ பாஷையும் சித்தர் எதிர்ப்பும், தொன்ம மொழி உணர்த்தும் புவியின் வரலாறு, கடவுளும் கடல் வெள்ளமும், பண்டைய தமிழ் நாகரிகம், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என 21 தலைப்புகளில் தமிழ் மொழி சிறப்பை அறியத்தருகிறது.
மனித இனம் தோன்றிய இடத்தில் மருத்துவமும் தோன்றியிருக்க வேண்டும் என நிறுவுகிறது. வணிக உறவால் தமிழ்ச் சொற்கள் வெளிநாடுகளில் உருமாறி வழங்கப்படுவதை பட்டியலாக தருகிறது. மொழி ஆய்வு செய்வோருக்கு பயன் தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்