பக்கங்கள்: 128. வெளியீடு: சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்ட் காலனி, (இராஜாஜி நகர் விரிவு), வில்லிவாக்கம், சென்னை-49. இந்நூல் சுமார் 417 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, இந்துமதக் கோட்பாடுகளைக் பிழையின்றி கடைபிடித்து, மாற்றாரையும் தம் இனமென சரிசமமாகப் பாவித்து, பரந்த மனத்துடனும், மனித சமுதாயத்தைப் பாரபட்சமின்றி சமநோக்குப் பார்வையில் வேற்றுமை பாராட்டாது தமது அதீத சக்தியால் பல்வேறு அற்புதங்கள் பல நிகழ்த்தி, மனிதனின் மனக் குறைகளை, பிணிகளைப் போக்கி அருள்பாலித்த ஞான குருவான ஸ்ரீ ராகவேந்திரர் பற்றியதாகும். இதில் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை பல்வேறு துயரங்களிலிருந்து உய்வித்து வரும் பிருந்தாவனத்தின் மஹிமைகளும், சுவாசியின் அருள் வாக்குகளும், ஸ்ரீ ராகவேந்திரரின் பாராயணம் என்று பல கனிகள் பரிமாறப்பட்டுள்ளன.