சு.முத்து, வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. (பக்கம்: 216)
பாரத நாடு பழங்காலத் தில் இருந்தே மனித குலத் தின் உடல் நலத்திற்கு, எத்தகைய பயிற்சிகள் தேவை என் பதை கலைகளின் மூலமும், யோகாசனங்கள் மூலமும் விளங்க எடுத்துரைத்துள் ளது. இந்த வரிசையில், சுராவின்
"தந்திரோபதி' ஒரு முக்கியமான மைல்கல் எனலாம்.கையினால் செய்யப்படும் முத்திரைகளையும், ஆசனங்களையும் விளக்கி அவற்றின் பயன்பாட்டையும், பாதிப் பையும் எடுத்துரைக்கிறார். முத்திரைகள் வெளிப்படுத் தும் உணர்ச்சியையும், அவற் றுக்கான ஸ்லோகங்களையும் பக்கம்-11ல் தெளிவாக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வகையான அணுக்களின் கூட்டிணைவிற்கும், முத்திரைகளுக் கும் உள்ள தொடர்பை கூறி முத்திரைகளின் மூலம் வரும் தெய்வீக சக்தியையும் விளக் குகிறார். படங்கள் மூலம், எளிதாக முத்திரைகளைக் காண்பித்து அவற்றின் செயல் முறை, கால அளவு, பயன் கள் மற்றும் அவற்றை செய் யும்போது பின்பற்ற வேண் டிய எச்சரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைப்பது நூலின் தனித்தன்மை ஆகும்.அத்தியாயம் -2ல் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த தந்திரமார்க்கமானது, உன்னத மனித நிலைக்கு சிறந்த மார்க் கம் என்பதைக் கூறி யோகிகள் இதைத் தான் பின்பற்றி ஆன்மிக வளத்துடன் இருந்தனர் என்பதையும், ஆன்மிகம் என்பது மதமல்ல, அது கொள்கை மற்றும் கோட் பாடுகளின் அடிப்படையில் அமைந்த, அதே சமயம் அறிவியல் பூர்வமானது என்பதையும் எல்லாரும் புரிந்து கொள் ளும் வண்ணம் விளக்கப் பட்டிருக்கிறது.அறிவியல் அடிப்படையில் நமது கலாசாரத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் நூல்.