நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. (பக்கம்:264, விலை: ).
74 இனிப்புகள்! அதுவும் இருட்டுக்கடை நெல்லை அல்வா போல சுவையான செய்திகள். நக்கீரன் மசாலா இதழில் தொடராக வந்த, உலகத் தலைவர்கள் பற்றிய உன்னதமான சம்பவங்கள். தொடர் இதழில் எழுதப்பட்டவை என்பதால், மெகா சீரியல் போல சில இடங்களில் இழுபறியும், பாதியில் முடிப்பதும், மீதியைத் தொடர்வதும் என்று வளர்கிறது நூல்.சதாம் உசேனில் தொடங்கி ஸ்டாலின், தலாய் லாமா, சிட்னி ஷெல்டன், டயானா, ஆபிரகாம் லிங்கன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புத்தர், முகம்மது யூனுஸ் போன்ற உலகத் தலைவர்கள் பற்றிய வெற்றியின் வாழ்க்கை ரகசியங்கள் வெளிச்சப்படுத்தப்பட்டுள்ளன.ஏழை மக்களுக்காக `மைக்ரோ கிரெடிட்' வங்கி உருவாக்கி, பங்களாதேஷில் பட்டினிச்சாவுகளை நிறுத்தி உழைக்க கடன் தந்து உதவிய முகம்மது யூனுஸ் 2006ல் நோபல் பரிசு பெற்ற செய்தி, படிப்பவருக்கு புதிய துடிப்பைத் தருகிறது. வெற்றியைப் பெற வாங்க வேண்டிய நூல் இது.