மாரி பதிப்பகம், "சிவகலை' இல்லம், 29, நாகாத்தம்மன் கோவில் தெரு, கொட்டுப்பாளையம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 224).
உளவியல் அறிஞர் சிங்மன் பிராய்டு, தனது ஆய்வுகள் மூலம் பல அரிய விஷயங்களை உள்ளத்தியல் மூலம் உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். விவாதத்திற்கும் சர்ச்சைக்குரியவையும் அவற்றில் சில உண்டு. உள்ளத்தியல் பேராசிரியராகப் பணிபுரியும் க.நாராயணன், இந்த புத்தகத்தில் உள்ளத்தின் இயல்பு, அதன் செயல்பாடுகள், மானுட வாழ்வில் அதன் பங்களிப்பு, உள்ளத்தில் ஏற்படும் சில முக்கிய கோளாறுகள், அவற்றைத் தடுப்பதற்கும் களைவதற்குமான வழிகள் எனப் பல விஷயங்களைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். அறிவியல் தொடர்பான தகவல்கள், தமிழுக்கு இந்த வகை நூல்கள் மிகவும் தேவையானவை. ஆசிரியரின் எளிய தமிழ் நடை பாராட்டுக்குரியது.