கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
ஆண்டணரூ கார்னகி கூறுகிறார், ஒரு மனிதன் முதலில் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், தனது பணத்தைச் சேமித்து வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். தனது பணத்தைச் சேமிப்பதால், எல்லாப் பழக்கங்களிலும் மிக உயர்ந்த மதிப்புள்ள சிக்கனத்தை உயர்வடையச் செய்கிறான். சிக்கனம் செல்வத்தை உருவாக்கும் உயர்ந்த வழி. அது நாகரிகம் அற்றவருக்கும் நாகரிகமுள்ளவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. சிக்கனம் செல்வத்தை வளர்ப்பதுடன் ஒருவரது குணத்தையும் மேம்படச் செய்கிறது. பெரும் செல்வம் சேர்த்தவர்கள் லாபங்கள் மற்றும் மீதங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதே அவர்களது வெற்றியின் ரகசியம். அவர்கள் அதிர்ஷ்டத்தால் செல்வச் செழிப்பைப் பெறவில்லை. ஆனால், அவர்கள் சில்லறைப் பணத்தை மற்றவர்கள் போல் வீண் செலவு செய்யாமல், வருடா வருடம் சேமித்து வைத்ததால் படிப்படியாகச் செல்வத்தைப் பெற்றனர். எதிர்கால சிந்தனையும் அக்கறையும் இல்லாதவர் எண்ணிப்பார்த்துக் காப்பாற்ற வேண்டிய மதிப்பற்றதாக கருதும் பென்னிகள், பத்து சென்ட் நாணயங்கள் மற்றும் கால் டாலர்கள் போன்ற போன்ற சிறிய தொகைகளைச் செலவு செய்ததால், அவர்களது செல்வம் ஒரு பிரமிடைப் போல் மெதுவாகவும் உறுதியாகவும் வளர்ந்தது