கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்டின் சரித்திரம் மிக ருசியானது. அவர் இளைஞராக இருந்தபொழுது, லண்டனில் கண்ணாடிகள் விற்பதற்காக ஒரு கடைக்கு நகராட்சியின் லைசென்ஸ் கேட்டார். மறுக்கப்பட்டது. கிளாஸ்கோவுக்குச் சென்று அங்கு வியாபாரம் செய்ய நினைத்தார். அங்கும் லைசென்ஸ் மறுக்கப்பட்டது. கலாசாலை வளாகத்தில் சிலருடைய நட்பு கிடைத்தது. அவர்கள் அந்த இடத்தில் கடையைத் திறக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். நேரம் முழுவதும் அதிலேயே செலவாகும் அளவுக்கு விற்பனைத் தொழில் அவர் வாழ்க்கையில் அங்கம் வகித்தது. இருந்தும் கிடைத்த ஓய்வு நேரங்களில், தான் காணும் பழுதடைந்த இயந்திரங்களைப் பழுது பார்த்துக் கொடுத்து வந்தார். அவை வெற்றிகரமாக மீண்டும் இயங்க ஆரம்பித்தன. அயல்நாட்டு மொழிகளில் எழுதப்பட்டிருந்த இயந்திரங்களைப் பற்றி புத்தகங்களைப் பார்த்தார். ஒரு மொழி அகராதியைக் கடன் வாங்கி அதன் உதவியால் பல புத்தகங்களைப் படித்தார். அங்குள்ள பேராசிரியர்கள் எல்லாம் அவரது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர் எம்மாதிரியாக இயந்திரங்களை வடிவமைக்கிறார் என்று பார்த்தனர். கலாசாலை வளாகத்தில் உள்ள ஒரு இயந்திரம் பழுதாகி விட்டது. அதை அவரிடம் பழுது பார்க்கக் கொடுத்தனர். அந்த பழுதை நீக்கினார், அது முன்போல் இயங்கத் தொட்ஙகி விட்டது. ஏன், ஒரு புது என்ஜினைப் போலவே வேலை செய்ய ஆரம்பித்தது.ஜேம்ஸ் வாட்டின் மகத்தான படைப்பாற்றல் உலகெங்கும் பிரசித்தமாயிற்று. காலம் மெல்ல நகர்ந்தது. அவரும் மெல்ல,மெல்ல படிப்படியாக மென்மேலும் கற்று உலகத்திலேயே புரட்சி செய்த அந்த நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவின் தொழிற்புரட்சிக்கு அது வித்திட்டது. மனித நாகரிகத்திற்கு ஒரு புதிய வேகம் வந்தது. ஒரு மகத்தான சக்தி பிறந்தது. இது போன்ற நூற்றுக் கணக்கான வெற்றிக் கதைகளைக் கொண்ட ஒரு வெற்றி நூல், இது. உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வழிகளைக் கூறுகிறது.